ஈழத்து இசைவானில் நீண்ட பயணம் செய்த இசைவாணர் கண்ணன் அவர்களுக்கு இலண்டனில் கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது.
ஈழத்தமிழினத்தை தன் மெட்டுக்களால் கட்டுப்போட்டு வைத்திருந்த ஒரு இசைமேதை. விடுதலை வேண்டிநின்ற மண்ணில் மக்களின் மனதை எழுச்சி பெறவைத்த இசையத் தந்தவர் இசையமைப்பாளர் கண்ணன் அவர்கள்.
தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் கலையும் பண்பாடும் வீரியம் கொண்டிருந்த காலத்தில் இவரது இசையின் மெட்டுக்கள் அந்த வரலாற்றைப் பதிந்து சென்றுள்ளது. இன்று அழியாவரம் பெற்ற அந்த பாடல்கள் தனது இலக்கினை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கின்றன.
இசைரசிகர்கள், இசைக்கலைஞர்கள், இசை ஆர்வலர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் இசைவாணரை கெளரவிக்கும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் நிகழ்வு ஒருங்கிணைப்புக்குழுவினர்.