கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான ப.டனுசன் என்பவர் நேற்று(21) மாலை கிளிநொச்சியிலிருந்து கிளிநொச்சி மேற்கு நோக்கி முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்களை ஏற்றிச் சென்ற போதே காணாமல் போனதாக பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில்
குறித்த இளைஞன் இன்று (22.02.2018) புதுமுறிப்புக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா, கொலையா என என்பது தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.