முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள மக்களின் காணிகளை அபகரித்து பெரும் எடுப்பில் அமைக்கப்பட்டுள்ள கோத்தபாய கடற்படை முகாமின் காணிகளை பூர்விகமாக கையகப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நில அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பினால் தோல்வியடைந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் மக்களின் 637 ஏக்கர் காணிகளைஅபகரித்து கோத்தபாய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
நில அளவீட்டுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் மேலதிக அரசாங்க அதிபரின் எழுத்து மூலஉறுதிமொழியுடன் கைவிடப்பட்டுள்ளது.
வடமாகானசபை உறுப்பினர்களான து.இரவிகரன் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்கள் போராடடத்துக்கு ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.