ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில், நாட்டு மக்களுக்கு பல்வேறு அறிவுறைகளையும் டெங்கு ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களையும், பரந்தளவில் மேற்கொண்டு வருகின்ற நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் உள்ள குடிநீர்ப் போத்தலில், அதிகளவிலான டெங்கு குடம்பிகள் காணபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது, ஊடகவியலாளர்களுக்கு நெஸ்கபே குடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த நெஸ்கபே இயந்திரத்தின் மேல் வைக்கப்படிருந்த குடிநீரிலேயே, இவ்வாறு டெங்கு குடம்பிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, அங்கிருந்த பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள் நெஸ்கபே குடித்திருந்தார்கள். பின்னர், ஒரு ஊடகவியலாளர் குடிநீர் போத்தில் டெங்கு குடம்பிகள் இருப்பதை கண்டு, அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்த,அங்கிருந்த அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, நீண்டக்காலமாக ஊடகவியலாளர் மாநாடு நடைபெறாதிருந்தமையால், டெங்கு குடம்பிகள் பரவியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.