நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறைந்த அதிகாரங்களுடனாவது பேணப்பட வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது விரைவில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது தொடர்பான 20ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாக ஜே.வி.பி தெரிவித்திருந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் நிஸாம் காரியப்பர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, குறைந்த அதிகாரங்களுடனேனும் தொடர்ந்து பேணப்பட வேண்டும்.
இதுவே சிறுபான்மை மக்களுக்கு அனுகூலத்தை தரும். எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களுக்குள் கலந்துரையாடியே இறுதி தீர்மானத்துக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.