கம்போடியாவில் இன்று உலகத்தமிழர் மாநாடு ஆரம்பமாகின்றது. இராஜராஜ சோழனின் ஆயிரம் ஆண்டு நினைவாக மிகப் பிரமாண்டமாக இவ்வாண்டு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் இலண்டனில் இருந்து ஒரு தொகுதி தமிழர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீரஞ்சன் மாநாட்டில் கலந்து கொண்டு இரண்டாவது அமர்வில் சிறப்புரை வழங்கியிருந்தார். இலண்டன் உச்சிமுருகன் கோவில் சார்பாக தமிழில் பூஜைகள் நடைபெறுவதாக தெரிவித்தமை கலந்து கொண்டவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது உரை கீழே உள்ள இணைப்பில் பார்வையிடலாம்.
நன்றி – சுருதி டிவி