நேற்றைய தினம் இலண்டன், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு என மூன்று இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக நிதி சேகரிக்கும் நடைப்பயணம் இடம்பெற்றுள்ளது.
இம்மாத இறுதியில் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஆரம்பமாக உள்ள தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகளுக்காக தேவைப்படும் நிதியை சேகரிப்பதற்காகவும் இவ் விளையாட்டுப் போட்டி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒரே நாளில் மூன்று நகரங்களில் நடைப்பயணம் இடம்பெற்றுள்ளது.
பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் இந்த நடைப்பயணத்துக்கு பல நிறுவனங்களும் ஆதரவு வழங்கியுள்ளன. லண்டனில் இயங்கும் Lotus Caring Hands அமைப்பு நிதி சேகரிப்பதற்காண தனது தளத்தை வழங்கி ஆதரவளித்துள்ளது.
இலண்டனில் சிறுவர்களும் இளைஞர்களும் வடக்கிலும் கிழக்கிலும் நடைப்பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து நிதி சேகரிக்கும் பணியில் முழுமனதுடன் ஈடுபட்டதுடன் சுமார் 4.5 மைல்கள் நடந்து தமது பங்களிப்பினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதிப்பங்களித்தோர் விபரம் : http://uk.virginmoneygiving.com/fund/Lotuscaringhands
படங்கள் – இலண்டன் – நன்றி : Baba Luxy, சோழா
படங்கள் – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நன்றி DATA ;