நேற்றைய தினம் இலண்டனில் இசைகளின் சங்கமம் நிகழ்வு மூன்றாவது வருடமாக நடைபெற்றது. சிறுவர்களின் இசை ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியில் சிகரம் அமைப்பு நடாத்திய “இசைகளின் சங்கமம்” -2018 அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.
வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு கிடைக்கின்ற மிகப்பெரிய மேடை. சிவப்பு நில விரிப்பில் அழைத்துவந்து மேடையேற்றி இருக்கின்றார்கள் சிகரம் அமைப்பினர். ஆழமான பயிற்சியை தாண்டிவந்த அனுபவம் இளம் பாடகர்களிலும் இசைக்கலைஞர்களிலும் தெரிந்தது. தென்னிந்திய பின்னணி பாடகர், இளம் இசையமைப்பாளர் ஆஜேஷ் இந்த நிகழ்வில் பாடகராக இல்லாமல் ஒரு பயிற்சியாளராகவே தனது திறமையைக் காட்டியுள்ளார்.
சிகரம் அமைப்பு இன்னும் மறைந்து இருக்கும் திறமையான இளையோரை கண்டுபிடித்து இனிவரும் இசைகளின் சங்கமத்தில் இணைக்க வேண்டும். வணக்கம் இலண்டன் இணையத்தின் வாழ்த்துக்கள் என்றும் இவர்களுக்கு.