முல்லைதீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நேற்றைய தினம் அதிபர்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கல்லூரியின் முதல் அதிபர் அமரர்.A.F.ஞானப்பிரகாசர் மறைந்த தினமாகிய 17 செப்டம்பர் திகதியினை அக்கல்லூரி அதிபர்கள் தினமாக பிரகடனப்படுத்தியதுடன் அன்றையதினத்தை விழா எடுத்து சிறப்பிக்கின்றனர்.
நேற்றைய தினம் கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் 12மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியில் கடமையாற்றி மறைவடைந்த 11 அதிபர்கள் நினைவு கூறப்பட்டனர்.