வடக்கு, கிழக்கு மக்களின் சட்டபூர்வ உரித்துடைய காணிகள் அம்மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து இவ்வருட டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அக்காணிகளை விடுவிப்பதை நிறைவுசெய்யுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார். துரிதகதியில் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி மூன்றாவது தடவையாக பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஒன்று கூடிய போது இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்விடையம்.
எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.