0
கொழும்பு அங்கொட சந்தி பீ 435 வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்துள்ள இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது காயமடைந்த நபர் முல்லேரியாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.