அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டதோடு நாம் பயிரிட்டு நாம் உண்போம் என்ற தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி எனும் எண்ணக்கருவில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பல்வேறு திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தனர்
இன்று காலை முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு கணேசபுரம் பகுதிக்கு வருகைதந்த விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதற் மஸ்தான் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 10.5 மில்லியன் ரூபா செலவில் கணேசபுரம் பகுதியில் நடைமுறைப்படுத்தும் ஏற்றுநீர்ப்பாசனம் (PVC குழாய் பொருத்துதல்)திட்டத்துக்கான வேலைத்திட்டத்தை பார்வையிட்டு அதற்க்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்தனர்
அதனைத் தொடர்ந்து கணேசபுரம் பகுதியில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிலக்கடலை உற்பத்தி வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கியதோடு மக்கள்மத்தியில் கருத்து தெரிவித்தனர் இதன்போது நாம் பயிரிட்டு நாம் உண்போம் என்ற தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி எனும் எண்ணக்கருவில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பயன்கள் தொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டதோடு உற்பத்தி பொருட்கள் விற்ப்பனைக்கு வரும் காலங்களில் இறக்குமதிகள் குறைக்கப்பட்டு மக்களது உற்பத்திகளை நியாய விலையில் விற்க்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் நவீன முறைகளுக்கு மாறி அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய குறைந்த உற்பத்தி செலவில் உற்பத்திகளை செய்து அதிகவிலையில் விற்ப்பதன் மூலம் நீங்கள் முன்னேறுவதோடு நாட்டின் வருமானத்தையும் உயர்த்த அனைவரையும் ஒன்ரினையுமாரும் கோரப்பட்டது
அதனை தொடர்ந்து முத்திஜயன்கட்டு மற்றும் பேராறு பகுதிகளில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தவுள்ள பல்வேறு திட்டங்களுக்கான பெயர்ப்பலகைகளை திரைநீக்கம் செய்து வைத்து திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்
நிகழ்வுகளில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதற் மஸ்தான் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் விவசாய அமைச்சின் பணிப்பாளர் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பிரதேச செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
(எமது முல்லைத்தீவு செய்தியாளர் சண்முகம் தவசீலன்)