செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸாரின் விசேட பிரிவினரால் வீடுகள் சோதனை பலர் கைது!

பொலிஸாரின் விசேட பிரிவினரால் வீடுகள் சோதனை பலர் கைது!

1 minutes read

 

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டடில் இடம்பெற்றது.

“வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கொக்குவில் – அதனை அண்டிய பகுதிகள், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More