செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா லைக்கா டீவியை இந்திய நிறுவனம் கொள்முதல் 

லைக்கா டீவியை இந்திய நிறுவனம் கொள்முதல் 

1 minutes read

 

உலகின் பிரமாண்ட ஐ பி தொலைக்காட்சி தளமான  லைக்கா டீவியை இந்தியாவைச் சேர்ந்த YUPP டீவி கொள்முதல் செய்துள்ளது. இதன்மூலம் உலகின் தமிழ் உட்பட இந்திய மொழிகளைச் சேர்ந்த  பிரமாண்டமான ஐ பி தொலைக்காட்சி தளமாக  YUPP டீவி உருப்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2018ல் லிபாரா Play  எனும்  ஐ பி தொலைக்காட்சி தளத்தினை கொள்முதல் செய்ததுடன் தமிழ் மக்களின் சந்தையில் முக்கிய நகர்வினை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவின் அத்திலாண்டா போன்ற நகரங்களில் தலமைச்செயலகங்களை வைத்திருக்கும் YUPP டீவி எதிர்வரும் காலங்களில் பிரித்தானியாவில் தமது நடவடிக்கையை விரிவுபடுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

YUPP டீவி தற்போது பதினைந்துக்கும்மேற்பட்ட தெற்கு ஆசிய மொழிகளில் தமது சேவையை சுமார் இரண்டு இலச்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More