செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த உணவ உரிமையாளர்

வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த உணவ உரிமையாளர்

1 minutes read

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பலசரக்கு வியாபார நிலையங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தது

இதன்போது அப்பகுதிக்கு வந்திருந்த தாவூத் உணவக உரிமையாளர் தமக்கும் அனுமதி தருமாறு உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

உணவகங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அதேவேளை குறித்த உணவகத்தின் அமைவிடம் முல்லை மாவட்ட பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளதால் தம்மால் அனுமதி தரமுடியாத என உதவி பிரதேச செயலாளர் மறுப்பு தெரிவிக்கவும் குறித்த உணவக உரிமையாளர் தகாத வார்த்தைகளாலும் உதவி பிரதேச செயலாளரை அச்சுறித்தியும் சென்றதுடன்
சற்று நேரத்தின் பின் உதவி பிரதேச செயலாளரின் கைதொலைபேசிக்கு வவுனியா பள்ளிவாசல் அருகில் இருந்து ரொஷான் என்று தன்னை அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் தொடர்பு கொண்டு குறித்த உணவகத்திற்கு அனுமதி வழங்காவிட்டால் நடப்பது வேறு என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது

மேலும் உதவி பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் தலையீடு காரணமாக இவ் விசாரணையை இடை நிறுத்துவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More