கொரோனா சந்தேகத்தில் யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.இதனால் இன்று(1.4.2020) மட்டும் மூன்று கொரோனா நோயாளர்கள் யாழில் இனங்காணப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும் எனவும் யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.