0
கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.