முல்லைத்தீவு மாவட்டத்தின் பேராறு வசந்தபுரகிராமத்தில் தமது காணிகளை துப்பரவாக்குவதற்காக டோசர்கள் கொண்டு காணியின் உரிமையாளர்கள் துப்பரவு பணியினை 20.08.2020 காலை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்போது சம்பவம் இடம்பெற்ற இடத்திற்க்கு வருகைதந்த சிங்கள பேரினவாத இராணுவத்தினர் டோசரினையும் சாரதியையும் வசந்தபுரம் முகாமுக்கு கொண்டுசென்றுள்ளதுடன் குறித்த காணி தொடர்பில் காணி உரிமையாளர்களிடம் அடையாளத்தினை காட்டுமாறு வற்புறுத்தியுள்ளார்கள்.
இரண்டு ஏக்கர் காணிக்கான உறுதிப்பத்திரம் கையில் இருக்கின்ற நிலையிலும் சிங்கள பேரினவாத படைபுலனாய்வாளர்கள் குறித்த காணி துப்பரவு பணியினை தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.