நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா பேரிடர் பற்றிய விழிப்புணர்ச்சியை சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்கோடு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையினால் இன்று விழிப்புணர்ச்சிக்கான மிதிவண்டி பயணம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுத்தல், போதைப்பொருள் பாவனையை தடுத்தல், வீதி விபத்தினை தடுத்தல், சூழல் மாசடைதலை தடுத்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணல் போன்ற கருப்பொருள்களில் சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த நிகழ்வு நடைபெற்றது.
கிளி சமூக அபிவிருத்தி பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பமானது. வைத்திய நிபுணர் பிரேம கிருஷ்னா, வைத்தியர் சத்தியமூர்த்தி, வைத்திய நிபுணர் தவராஜா, வைத்தியர் எழில்வேல், வைத்தியர் முருகானந்தன் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலர் இந்த பயணத்தில் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்ச்சிக்கான மிதிவண்டி பயணத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக ஆனையிறவு மற்றும் பரந்தன் பிரதேசங்களில் இருந்து கிளி நகர றோட்டரி கழக உறுப்பினர்கள் மற்றும் பலர் இணைந்துகொண்டு கிளிநொச்சி நகர் வரை சென்றடைந்தனர்.