செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளி புதுமுறிப்பு கிராம மக்களுக்கு கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு 

கிளி புதுமுறிப்பு கிராம மக்களுக்கு கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு 

4 minutes read

கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடைமுறைப்படுத்தும் “பயன் தரும் மரங்கள் நடுவோம் வளம் பல பெறுவோம்” செயற்றிட்டத்தின் முதலாம் கட்டம் இன்று (20/11/2020) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. 

புதுமுறிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள 27 குடும்பங்களுக்கு தலா 10 பயன் தரும் மரக்கன்றுகள் வீதம் வழங்கி நடுகை செய்யும்  இந்நிகழ்வு 20.11.2020 காலை 10 மணிக்கு பயன் பெறுவோர் இல்லங்களில் கிளிரெக்கின் தலைவர் தி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.அற்புதச்சந்திரன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன், கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.சின்னராசா, கரைச்சி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ச.பி.அமலராசா, கண்டாவளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ராஜ்விநோத், SLCDF நிறுவனத்தின் இணைப்பாளர் சிவானந்தன் மற்றும் கிளிரெக் சமூகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

பயன் தரும் மரங்களின் நடுகை, பராமரிப்பு மற்றும் நன்மைகள் தொடர்பான விளக்கங்களை பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மா, பலா, ஈரப்பலா, தென்னை, வாழை, நெல்லி, தோடை, தேசி, மாதுளை, கொய்யா, அகத்தி, பஷன்புறுட் ஆகிய பயன்தரு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.


இத்திட்டத்தின் தொடர் செயற்பாடாக பயன்தரு மரக்கன்றுகளை பராமரித்தல், வீட்டுத்தோட்டம் என்பன தொடர்பாக தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து பயனாளிகளுக்குப் பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், நடுகை செய்யப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்கும் குடும்பங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More