மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில், இதுவரை 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் அன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
அதன்படி கடந்த டிசம்பர் 18 முதல் இதுவரை 8000 விரைவான அன்டிஜென் சோதனைகள் நடத்தப்பட்டன என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.