0

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கா கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்றைய தினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவர் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆவர்.
முன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.