இணையவசதிகளைக் கொண்ட 2,000 கல்வி நிலையங்கள் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக நாடுமுழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இணையவசதிகளுடனான இந்த நிலையங்கள் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்தோதைய ஆய்வகங்கள், வணக்கஸ்தலங்களில் நடத்திச்செல்லப்படும் கல்விநிலையங்கள், சமூக அரங்குகளில் நடத்திச் செல்லப்படும் கல்வி நிலையங்களில் இதுபோன்ற இணையவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத் தலைவர்கள், கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் இந்த இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.