அரசாங்கத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், M.S.தௌபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்றைய சபை அமர்வின் போது கருத்து தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் எடுத்துக்கூறியும் அதனை செவிமடுக்காமல் அரசாங்கம் நாட்டு மக்களை கஷ்டத்தில் ஆழ்த்தியதன் காரணமாக விலக தீர்மானித்ததாக பைசல் காசிம் தெரிவித்தார்.