தாம் வழமை போன்று நலத்துடன் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூகவலைத்தளங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் பொய் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நோய்வாய்ப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வௌியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோயாளிகளை பார்வையிடுவதற்கேனும் தாம் வைத்தியசாலைகளுக்கு செல்வதில்லையெனவும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த தேக ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.