பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரி அலரி மாளிகைக்கு அருகில், No Deal Gama-இல் உள்ள போராட்டக்காரர்கள், பிரதமரின் இல்லத்திற்கு இன்று செல்ல முயற்சித்தனர்.
எனினும், பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அலரி மாளிகைக்கு அருகிலுள்ள No Deal Gama போராட்டக்களத்தில் இருந்து இன்று (26) முற்பகல் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.
பேரணி கொழும்பு பிளவர் வீதியை சென்றடைந்தபோது, பொலிஸார் இடைமறித்தனர்.
இதன்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
பின்னர் அந்தக் குழுவினர் மற்றொரு வழியாக பிரதமரின் இல்லம் அமைந்துள்ள பகுதிக்குள் செல்ல முயன்றனர்.
அங்கும் பொலிஸார் அவர்களை தடுத்ததுடன், நீதிமன்ற உத்தரவை அறிவித்தனர்.
இதனையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றன