ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மன், மலாவி, மொன்டனீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் ஐக்கிய நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி தீர்மானம் நேற்று முன்தினம் (06) வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தையே இலங்கை திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.