கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து 3 வாரங்கள் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மொழித்தேர்வுக்கான தயார்ப்படுத்தல் வகுப்புகள் (தரம் 2 & தரம் 3 – Nivå-2 & Nivå-3) நேற்று 04.11.22 நிறைவடைந்தன.
சிவதாஸ் மாஸ்ர் முதன்மையாக கலந்து கொண்ட இவ் வகுப்புக்களில் திருமகள் சுபநேந்திரராஜா, காவியா கருணாகரன், தேவகி காண்டீபன் ஆகியோர் உதவி ஆசிரியர்களாக பங்களித்தனர்.
55 மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
04.11.22 அன்று தேர்வுகள் பற்றிய தகவல் பரிமாறலுடன் வகுப்புகள் நிறைவுபெற்றன. தேர்வு நடைமுறைகள், கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டிருந்தன.
கற்பித்தலுக்கு உகந்த இடவசதிகளைத் தொடர்ச்சியாக 6 வருடங்கள் சாத்தியப்படுத்தி வரும் விக்கி நடேசன் அவர்களுக்கு பலரும் நன்றி பாராட்டி வருகின்றனர்.
நன்றி -ரூபன் சிவராஜா