கிளிநொச்சி – கனகபுரம் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் ஈழ விடுதலைக்காக மாண்ட மாவீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்ற கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகி வருகிறது.
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.00 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தி சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த சிரமதான பணியில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தங்களுடைய குழந்தைகளின் வித்துடல்களை விதைத்த பெற்றோர்,உறவுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முதன்மை செயற்பாட்டாளர் தியாகு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.