புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை!

நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை!

2 minutes read

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத்தண்டனை பெற்று வந்த நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 பேருக்குச் சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

பின்னர் மேன்முறையீட்டு வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேருக்கு மட்டும் மரண தண்டனை உறுதியானது.

கடந்த 2000 ஆம் ஆண்டு நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 6 பேரின் மரண தண்டனை உயர் நீதிமன்றத்தால் இரத்துச் செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்தது.

தமிழக அமைச்சரவையின் இந்தத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது.

பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது.

7 பேரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் எந்தப் பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

பின்னர் பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, விடுப்பு காலச் செயற்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்திய உயர் நீதிமன்றம், தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசமைப்பின் 142 ஆவது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட எஞ்சிய 6 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலிருந்து நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More