செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐஸ்போதைப்பொருள் தொடர்பில் அமுலுக்கு வந்த மரண தண்டனை சட்டம்

ஐஸ்போதைப்பொருள் தொடர்பில் அமுலுக்கு வந்த மரண தண்டனை சட்டம்

2 minutes read

ஐஸ்போதைப்பொருளுக்கு எதிரான மரணதண்டனை சட்டம் 24/11/2022 முதல் சபாநாயகர் கையொப்பமிட்டு பாராளுமன்றத்தில் அமுலுக்கு வந்ததுள்ளது

ஐஸ்போதைப்பொருள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த போதைப்பொருள் பாவனையால் இளைஞர்கள் சீரழிக்க பட்டும் வரும் நிலையில் இப்படியான ஒரு சட்டம் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையாகவே இருக்கின்றது.

ஐஸ்போதைப்பொருள் இது போதைப்பொருள் பட்டியலிலேயே மிகவும் ஆபத்தானது. முதல் முதலில் 2 ஆம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான் தமது போர்வீரர்களை ஓய்வின்றி போராட பயன் படுத்திய ஆயுதமாகவே இது அனைவராலும் வர்ணிக்கப்படுகிறது. ஹெரோயின் ,கஞ்சா போன்றல்லாது 100% இரசாயனமாகவே பார்க்கப்படுவதுடன் மற்ற வகை போதைப் பொருட்களை விடவும் நச்சு தன்மையானது நீண்ட நாட்களுக்கு உடலில் தங்க கூடியது ஆகும் .

இதன் விளைவு தூக்கம் இன்மை , பசி , சோர்வு , அசாதாரண பதற்றம் , கோபம் , அதிக வியர்வை , தூங்க முடியாமை , தலைவலி ஆகும் . நீண்ட கால விளைவு தனிமை விரும்பல் , சந்தேகம் , சுவாசிக்க கடினம் , பற்கள் அழுகுதல் (meth -mouth ),சடுதியான நிறை குறைவு , குழப்பம் , இருள் விருப்பம் , பேசாநிலை , பிடிப்பற்ற வாழ்க்கை நிலை என்பனவாகும்.

இந்த ஐஸ்போதைப்பொருளின் ஆபத்தான நிலை எதுவும் தேவை இல்லை ஐஸ் மட்டும் போதும் என்ற நிலை (me and my ice ) ஐஸுக்காக எதுவும் செய்வேன் என்ற நிலை மனநலத்துறையில் இந்த அரி குறியை meth psychosis என அழைப்பர்.

இத்தகைய ஐஸ் போதைப்பொருளை எதிர்த்து மரணதண்டனை அமுலாக்க பட வேண்டும் என்று 2019 காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரி பிபிசிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.

“மரண தண்டனையை நீக்கும் சட்டம் வரைவு நாடாளுமன்றுக்குக் கொண்டு வரப்படுவது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நிழலுலகத்தினர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதாக அமைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை நீக்கும் சட்ட வரைவு நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டால் அன்றைய தினத்தை நாட்டின் தேசிய துக்க தினமாக பிரகடனபடுத்துவேன்”இதுவே அதுவாகும் .

இவர் கூறியது போல் ஐஸுக்கு எதிராக மரணதண்டனையை கொண்டு வருவது சில அரசியல் தரப்பின் சுய குற்றங்களுக்கும் ஆபத்தாக அமையும் என்று மரண தண்டனையை ரத்து செய்ய பல நடவடிக்கையை எடுத்தது சில அரசியல் தரப்பு அனைவரும் அறிந்ததே

1974 ஆம் ஆண்டு பின் யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை 1956 ஆண்டு எஸ்.டபில்யூ .ஆர்.டி.பண்டாரநாயக்க மரணதண்டனையை இல்லது ஒழித்தார்.

பின் மீண்டும் 1959ஆம் ஆண்டு மீண்டும் மரண தண்டனை அமுலுக்கு வந்தது அதாவது நீதி மன்ற தீர்ப்பில் ஜனாதிபதியின் அனுமதியுடன் தண்டனை வழங்க பட வேண்டும் என்பதே அரசமைப்பு சட்டம் ஆகும்.

இதை போல் உலகில் குறைந்தளவிலான நாடுகள் கொலை ,கொலை தொடர்பான குற்றம், பாலியல் வன்புணர்வு ,போதைப்பொருள்சார் குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையும் 2012 முதல் போதை மருத்துத்தொடர்பான குற்றஞ்சாட்டுக்கு மரண தண்டனையை சட்டப்படியான நிறைவேற்றும் நாடுகளின் பட்டியலில் உள்ளது .

இதை தொடர்பாக கொண்டே அக்டோபர் 19 ஆம் திகதி சட்டமூலம் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது இதனை தொடர்ந்து விஷ மற்றும் ஆபத்தான ஒளவிடதங்கள் திருத்த சட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன கையொப்பமிட்டுள்ளார்.

இந்த மரணதண்டனை ஐஸ் போதைப்பொருள் வைத்திருப்போர் போதை வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் 5g அல்லது அதற்கு மேல் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தாலுக்காக வழங்கப்படும் .

2022 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க விஷ மற்றும் ஆபத்தான ஓளடதங்கள் சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More