சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பில் இன்று நடைபெறுகின்றது.
ஐக்கிய மக்கள் கட்சியின் மாநாடு இன்று பிற்பகல் 1:00 மணிக்குக் கொழும்பு, பொரளையில் உள்ள கேம்பல் பூங்காவில் ஆரம்பமாகியுள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்
இந்த மாநாட்டில் பங்கேற்கப் பலர் அணிதிரண்டுள்ளனர்.
கட்சி உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சியின் பலத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகின்றது” – என்றார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்களும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.