நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்த்தன ஆகியோர் கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டடது
இதன்போது குறித்த இருவரையும், தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், பிணையாளர்களின் வசிப்பிடச் சொத்துக்களை உறுதிப்படுத்தல்,வெளிநாட்டுப் பயணத்தடை மற்றும் மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி கையொப்பமிடல் வேண்டும் போன்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன.