ஊரே மெச்ச நடந்தது சரவணன்-மீனாட்சி நிச்சயதார்தம். கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னால் மீனாட்சிக்கு சிறு தீவிபத்தில் கழுத்துக்கு கீழ் வெந்துபோக தசைகள் சுருங்கி சற்று விகாரமானது.
பெண்வீட்டார் போனை சரவணன் வீட்டில் யாரும் எடுக்கவில்லை. சரவணன் கூட மீனாட்சியின் போனை தவிர்த்தான். நிச்சயம் தானே நடந்துருக்கு.. நிறுத்திடலாம் என்றனர் கூலாக. உறுவகேலி செய்யாமல் செய்துகாட்டினர்.
மாதங்கள் கடந்தன. ஒரு வளைவான பாதையிலே விபரீத விளைவு. சிறுமூளை மயக்கநீர் அருந்தியதால் கட்டுப்பாடிழந்த பைக். சரவணன் கால்முறிந்து இன்று மருத்துவமனையில்.
உறவினர்கள் முகத்தில் சலிப்பு. சரவணன் தன் வேலைகளைக்கூட நர்ஸ் உதவி இல்லாமல் செய்ய முடியாமல் போனது. Ambiquate செய்த கால்.. வலுவிழந்த மற்றொரு கால்..
ஒரு நாள் மாலை 6 மணி இருக்கும்.. சரவணன் calling என்று மீனாட்சியின் மொபைல் அலறியது. மீனு…, நான்…நான்…சரவணன். ஓ..நீங்களா.. நான் இப்போ ரொம்ப நொந்து போயிருக்கேன் மீனு.. என்று நடந்ததை சொல்ல…
Oh my god.. சரி சரவணா.. இப்போ என்ன உன்னோட உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடரியா? உனக்கு சேவை செய்ய சம்பளம் இல்லாத நர்ஸ் தேடரியான்னு எல்லாம் நான் கேட்க மாட்டேன்.
அன்னிக்கி வஞ்சகமா ஒதுக்கிட்டு இண்னிக்கி எங்கிட்டயே தஞ்சம் அடைய வெச்சான் பாரு.. தெய்வம் நின்னு கொல்லும்னு எல்லாம் சபிக்க மாட்டேன்.
நிச்சயதார்த்தத்திற்கு அர்த்தம் எனக்கு தெரியும் சரவணா.. எனக்கு உள்ளத்தில் ஊனமில்லை my dear. உனக்கு நான் இருக்கேன். Wait..இதோ வரேன்.
போனில் வெகுநேரம் ஆனது சரவணனின் தேம்பல் ஒலி அடங்க…
– நா.ரங்கராசன்
நன்றி : சிறுகதைகள்.காம்