இலங்கையில் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானப் பாவனையால் நாளாந்தம் சுமார் 110 பேர் பலியாகின்றனர்.
புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய ஆணையம், நாட்டில் உள்ள போக்கு மற்றும் இத்தகைய நடைமுறைகளைத் தடுக்க கடுமையான சட்டங்களின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச,
“சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் மதகுருமார்களும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை ஊக்குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பாவனையால் வருடாந்தம் சுமார் 40 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
இத்தகைய குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இதுபோன்ற மரணங்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன” – என்றார்.
வரிகளைத் திருத்தவும், புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாட்டுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை இயற்றவும் அவர் முன்மொழிந்தார்.