உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு சென்னை – நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று ஆரம்பமானது.
இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ. சுமந்திரன், வி. இராதாகிருஷ்ணன், மலேசிய தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றினர்.
இந்த மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு ‘தென்னாட்டு அண்ணல்’ விருது வழங்கப்பட்ட்டது.
இலங்கை எம்.பிக்களான விக்னேஸ்வரன், சுமந்திரன், இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒன்றுசேர்ந்து திருமாவளவனுக்கு விருது வழங்கிக் கௌரவித்தனர்.