செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனவரி 17 முதல் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

ஜனவரி 17 முதல் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

1 minutes read

2013 ஜூன் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க திருத்தப்பட்ட பகிரங்க பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவுக்கமைய, ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு ஜனவரி 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை விதிக்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை விதிக்கப்படும் குறித்த காலப்பகுதியில்,

  • பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், ஒழுங்குபடுத்தல்
  • பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துதல்
  • குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல்
  • குறித்த பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குவதாகவோ, அது போன்ற மாதிரி வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன குற்றங்களாகும்.

– குறித்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாவர்.

எவரேனுமொருவர் அல்லது நிறுவனம், குறித்த உத்தரவுகளை ஏதேனுமொரு வகையில் மீறுதல் அல்லது செயற்படும் நிலையில், அது பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ, பொலிஸ் தலைமையகத்துக்கோ, பரீட்சைகள் திணைக்களத்துக்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி. தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • பொலிஸ் தலைமையகம் – 011 2421111

– பொலிஸ் அவசர தொலைபேசி – 119

– பரீட்சைகள் திணைக்கள உடனடித் தொலைபேசி – 1911

– பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் – 011 2785211/ 011 2785212

– பாடசாலை பரீட்சைகள் ஒழுங்குபடுத்தல் மற்றும் பெறுபேறுகள் பிரிவு – 011 2784208/ 011 2784537

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More