இலங்கைத் தமிழரசுக் கட்சி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று செலுத்தியது.
யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
யாழ். மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டு பணம் செலுத்தப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.