தனது தந்தையை மகன் பொல்லால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் நுவரெலியா – கந்தப்பளையில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய போது தனது தந்தையைத் தானே தாக்கிப் படுகொலை செய்தார் என்று பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய மூத்த மகனை கந்தப்பளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அயல் வீட்டார் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.