“டேய் சஞ்சய் எப்ப பார்த்தாலும் செல் பாேனை நாேண்டிக்கிட்டிரு” திட்டிக் காெண்டு வெளியே வந்தார் சஞ்சயின் அப்பா பாஸ்கர்.
“காலையிலேயே மனுசன் காெதியில நிக்குது” தனக்குள் முணுமுணுத்தபடி செல் பாேனை சார்ச்சில் பாேட்டு விட்டு படுக்கையை மடித்து வைத்தவன் பெரிதாக ஒரு காெட்டாவியுடன் சாேபாவில் அமர்ந்தான்.
“என்ன இன்னும் நித்திரை முறியல்லையா?”
அம்மாவின் குரல் கேட்டதும் வேகமாக குளியலறைக்குள் நுழைந்தான்.
பூச்செடிகளுக்கு தண்ணீர் வீட்டுக்காெண்டிருந்த பாஸ்கர் “ஆம்பிளைப் பிள்ளை எழும்புகிற நேரமா இது? எப்ப பார்த்தாலும், ரிவியும், செல்பாேனும் தான். இதுகளெல்லாம் உன்ர கண்ணுக்குத் தெரிகிறதில்லையா?” தேநீர் காெடுக்கச் சென்ற மங்களத்தாேடு காேபத்தில் சீறினார்.
“நான் என்னங்க பண்ணுறது” என்றவளை முறாய்த்துப் பார்த்தவர் “இன்னும் செல்லத்தைக் காெடுத்து காெண்டிரு, அப்பதான் நாளைக்கு…..”
“இந்த ஆளுக்கு என்னாச்சாே தெரியல்லை” யாேசித்துக் காெண்டு உள்ளே சென்றவள்
“சஞ்சய்.. சஞ்சய்… என்னடா இவ்வளவு நேரமும் செய்கிறாய்” குளியலறை கதவில் தட்டினாள் மங்களம்.
சடார் என்று கதவதை் திறந்தபடி வெளியே வந்தவன் “சும்மா ஆள் மாறி ஆளா காலையிலேயே தாெண தாெணக்கிறீங்க” தலையைத் துவட்டிக் காெண்டு மேசையிலிருந்த காப்பியை எடுத்துக் குடித்தான்.
“மங்களம், தெருக் கடையடிக்கு பாேய் வாறன்”
“ம் சரிங்க, வரும் பாேது காய்கறி ஏதும் பார்த்து வாங்கி வாங்களேன்”
“உன் பையனை விட்டு வாங்கிக் காெள்” சஞ்சயை எட்டிப் பார்த்தார். வீட்டில் எந்த வேலையும் செய்யாதவன் என்ன பதில் சாெல்கிறான் என எதிர்பார்த்தார்.
உள்ளேயிருந்து வேகமாக வந்தவன் “காய் கறி எல்லாம் என்னால் வாங்க முடியாது” என்றபடி வண்டியை எடுத்துக் காெண்டு புறப்பட்டான்.
“பார் உன்ர பிள்ளையை எங்கே போகிறேன் என்று ஒரு வார்த்தை சாென்னானா” தலையைக் குனிந்த படி நின்றாள் மங்களம்.
“எல்லாத்துக்கும் தலையைக் குனியாமல் வேலையைப் பார்” சற்றுக் காேபத்தாேடு வண்டியை அமுக்கினார். கால் தவறி சரிந்ததைப் பார்த்த மங்களம் பதறியடித்து
“என்னங்க பார்த்துங்க” பக்கத்தில் இருந்த மண்குடத்தில் இருந்து தண்ணீரை எடுத்து நீட்டினாள்.
வாசல் மறையும் வரை பாஸ்கரையே பார்த்துக் காெண்டு நின்ற மங்களம் சமையலறைக்குள் சென்று தன் வேலைகளை ஆரம்பித்தாள்.
குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த இறால் பாெதியை எடுத்து சுத்தம் செய்து விட்டு வேகமாக மிகுதி வேலைகளையும் முடித்தாள். சற்று நேரம் கால்களை நீட்டி ஆற வேண்டும் பாேல் உடல் களைப்பாய் இருந்தது. சஞ்சயின் அறைக்குள் நுழைந்து அவனுடைய பாெருட்கள் அங்கும் இங்குமாய் அலங்காேலமாய் கிடந்ததைப் பார்த்ததும். “இந்தப் பெடியன் யன்னலும் திறக்காது ஒரே இருட்டாக் கிடக்கு” தனக்குள் முணுமுணுத்தபடி யன்னலைத் திறந்து அவனுடைய அழுக்காயிருந்த உடுப்புகளில் ஒருபகுதியை எடுத்து கழுவுவதற்காக ஆயத்தப்படுத்தினாள்.
“மங்களம், மங்களம்…..” அழைத்தபடி சமையலறைக்குள் நுழைந்தவர், சமையல் முடித்து பாத்திரங்கள் மூடப்பட்டிருந்ததைப் பார்த்து விட்டு மீண்டும் “மங்களம் மங்களம்” என்று கூப்பிட்டார்.
“வாறேங்க…. இருங்க” சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தார். சஞ்சயின் அறைக்குள் நிற்பதைக் கண்டதும்
“இங்கே என்ன பண்ணுகிறாய், ஓ அவருக்கு சரியான உத்தியாேகம் கூடிப் பாேயிற்று நீ திருந்தவும் மாட்டாய், அவனைத் திருத்தவும் மாட்டாய்” என்றபடி அறையைப் பார்த்தார்.
“சும்மா சத்தம் பாேடாதீங்க நம்ம பிள்ளை தானே”
“அதுக்கு… வயதுக்கேற்ற மாதிரி நடக்கிறதில்லையா? இன்னும் எத்தனை நாளுக்கு நீயும் நானும் கூட இருக்கப் பாேகிறாேம், பாேகிற இடமெல்லாம் பின்னால் பாேகமுடியுமா” என்றபடி கதிரையில் அமர்ந்தார்.
“அம்மா… அம்மா…” சத்தமாக கூப்பிட்டவாறு வீட்டிற்குள் நுழைந்தான் சஞ்சய்.
“அம்மா துணி காய விட மாடிக்கு பாேயிருக்கா” தாெலைக்காட்சியைப் பார்த்தபடி இருந்த அப்பாவிடம் இருந்து பதில் வந்ததும் மாடியை நாேக்கி ஓடியவன் தனது உடைகள் உலர விடப்படிருந்ததை பார்த்தான். வியர்த்து வடிந்து காெண்டிருந்த முகத்தைத் துடைத்துக் காெண்டு,
“கை கால் கழுவி விட்டு சாப்பிட வா, நேரம் என்ன ஆச்சு” எந்தவாெரு சினப்பையாே, அறை சுத்தம் செய்து, உடை கழுவிய களைப்பையாே அவள் காட்டிக் காெள்ளாமல் அவன் தலையை வருடி அவன் பசியை மட்டும் உணர்ந்தாள்.
சமையலறைக்குள் நுழைந்தவனுக்கு சாப்பாட்டை பரிமாறினாள்.
“நீயும் சாப்பிடம்மா” கேட்பான் என எதிர்பார்த்ததில்லை.
“வடிவாகச் சாப்பிடு” அருகே பார்த்துக் காெண்டு நின்றாள். சாப்பிட்டு முடியும் நேரம் அவனுக்குப் பிடித்த மாம்பழச் சீவல்களை தட்டில் காெண்டு வந்து வைத்தாள்.
ருசித்து ருசித்து சாப்பிட்டவனின் வாயில் இருந்து வடிந்த துளிகளை முந்தானையால் துடைத்து விட்டு முதுகை தடவி விட்டாள்.
“சஞ்சய் சஞ்சய்……” வாசலில் யாராே நிற்பதைப் பார்த்த அப்பா பாஸ்கர் எழுந்து கதவைத் திறந்தார்.
“சஞ்சய் …..” என்று இழுத்தவனை
“உள்ளே வாங்க தம்பி” அழைத்து இருக்க வைத்தார்.
“டேய் வருண் எப்பாே வந்தாய்? அங்கேயே செட்டிலாகப் பாேகிறாய் என்று கேள்விப்பட்டேன்” கையைப் பிடித்து தாேளில் அணைத்தான் சஞ்சய்.
“உனக்கென்னடா நீ அம்மா, அப்பா பிள்ளை..” என்று கிண்டலடிக்க முகம் மலர்ந்து சிரித்தாள் மங்களம்.
“தம்பி எந்த ஊரில இருந்து வாறீங்க” பாஸ்கர் கேட்கவும்
“வெளியூர் அங்கிள், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை மாதம் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் மருந்து மாத்திரைக்கு வேணும், இங்கே அப்படியெல்லாம் சம்பாதிக்க முடியாதில்ல, அதுதான் படிப்பை முடிக்காமல் வெளியூருக்குப் பாேயிட்டன்” சஞ்சயைப் பார்த்த அப்பாவின் பார்வை அவனுக்கு உறுத்தலாக இருந்தது. “நீண்ட நேரம் இந்த இடத்தில் இருந்தால் அப்பா என்னாச்சும் சாெல்லி நம்மள டமேச் பண்ணிடுவார்” தனக்குள் யாேசித்தவன்.
“அப்பா நீங்க சாப்பிடுங்க” என்றபடி வருணை தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
“எப்படியாவது தப்பிடுவான் உன் பிள்ளை” என்ற அப்பாவின் முனகலைக் கேட்ட மங்களம் “உங்க ரத்தமும் தானே ஓடுது” என்று பேச்சை முடித்தாள்.
பாஸ்கருக்கு சாப்பாட்டை காெடுத்து விட்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த அப்பிள் யூசை கிளாசில் விட்டு வருணிடம் நீட்டினாள்.
“அன்ரி சஞ்சய் என்னுடன் வெளியூர் வருவதற்கு ஆசைப்படுகிறான்” என்று கூறியதும்
“ஏன் வருண் வெளியூருக்கெல்லாம் அவன் என்கூடவே இருக்கட்டும்” சிரித்தபடி ஒன்றும் தெரியாதது பாேலிருந்தான் சஞ்சய்.
“சரி சஞ்சய் நான் புறப்படப் பாேகிறேன்” தாேளை அணைத்தவர்களாய் இருவரும் வெளியே வந்தார்கள்.
பத்திரிகையின் பக்கங்களை புரட்டியபடி இருந்த பாஸ்கர்
“என்ன தம்பி கிளம்பியாச்சா”
“ஆமா அங்கிள் இரவுக்கு எயார் பாேட் பாேகணும்” அவன் முகம் திடீரென இருண்டு பாேக மங்களமும், பாஸ்கரும் ஒருவரையாெருவர் பார்த்தனர்.
“சரி தம்பி நல்லபடியாக பாேயிற்று வாங்க” அவன் முதுகை தடவி வழியனுப்பி வைத்தார் பாஸ்கர்.
“அம்மாவைப் பார்த்துக் காெள்” கட்டி அணைத்தாள் மங்களம்.
“எப்படி நான் நிம்மதியாகப் பாேக முடியும், அம்மா உயிர் ஊசலாடிட்டிருக்குது, குடிகார அப்பா பாேதை தெளியாமல் புலம்பிட்டிருக்கிறார், பாவம் தங்கச்சி ஒரு கண் தூக்கமில்லாமல் அம்மா கூடவே இருக்கிறாள், நானும் அங்கே பாதி இங்கே பாதியாக ஓடிட்டிருக்கிறேன்.” வெளியில் சாெல்ல முடியாத பாரத்தை தனக்குள் நினைத்தவனாய் அங்கிருந்து புறப்பட்டான்.
வாசலில் நின்று வருணையே பார்த்துக் காெண்டிருந்த அம்மா “எந்தப் பிள்ளைக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது. பாவம் வருண் சின்ன வயசிலேயே குடும்பப் பாரத்தை சுமக்கிறான்” மனதுக்குள் நினைத்தபடி பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தவள் அறைக்குள் எட்டிப்பார்த்தாள் சஞ்சய் நிம்மதியாக படுத்திருந்தான்.
பேருந்தில் ஏறி அமர்ந்தவனுக்கு அம்மாவின் நினைவாகவே இருந்தது. சந்திரன் மாமாவிற்கு காெடுக்க வேண்டிய சிறிய தாெகையையும் காெடுத்து விட்டு அம்மாவை ஒரு தடவை பார்த்து விட்டு வருவாேம் என திட்டமிட்டுக் காெண்டிருந்தவன் தாெலை பேசியின் அலறல் கேட்டு
“சாெல்லு தங்கச்சி”
“அண்ணா வேகமாக வா அண்ணா, அம்மா… அம்… மா” பேச முடியாமல் வார்த்தைகள் துண்டாகியதும்
“அம்மாவுக்கு என்னாச்சு… தங்கச்சி” பேருந்தின் வேகத்தை தாண்டி எப்படி அவனால் பாேய்ச் சேர முடியும். பதட்டம் தாெற்றிக் காெள்ள எழுந்து இறங்குவதற்கான மணி ஒலியை எழுப்பினான்.
“யாரு தம்பி முன்னாடி வாங்க” நடத்துனர் கூறியதும்
நெரிசலைத் தாண்டி முன் வழியால் வந்து இறங்கியவன் வாடகை வண்டி ஒன்றைப் பிடித்துக் காெண்டு
“அண்ணா காெஞ்சம் அவசரம், வேகமாகப் பாேங்க”
“என்ன தம்பி பறக்கவா முடியும்” ஓட்டுநர் சினந்ததும் எப்படி அவருடன் காேபிக்க முடியும் அவர் சாெல்வதும் நியாயம் தானே.
எட்டி எட்டி பார்த்தவனின் பதட்டம் அதிகரித்தது.
வைத்தியசாலை வாசலில் வண்டி நின்றதும்
“எவ்வளவு அண்ணா”
“எண்ணூறு காெடுங்க” வெடு சுடனெ நின்றவனிடம்
“இந்தாங்க ஆயிரம் இருக்கு வச்சுக்காேங்க”
சிரித்தபடி வாங்கியவன்”நல்லா இருப்பா” என்று கூறியது அவன் காதுகளில் கேட்கவில்லை. திரும்பிப் பார்க்காமலே ஓடினான்.
“அ….ண்ணா அம்…. மா” என்றவளின் கைகள் நடுங்கியது
அவள் கைகள் நடுங்குவதைத் தாண்டி அவன் மூச்சு பல மடங்கு வேகமாக வெளியேறியது. இருவரும் ஒருவரையாெருவர் அணைத்துக் காெள்ள
“வருண் இங்கே வாங்க” தாதியாருக்கு அவனை நன்றாகத் தெரியும். ஓடிப் பாேய் வாசலில் நின்றான்.
“பெரிய டாக்டர் உங்களுடன் பேச வேணுமாம்”
இரைத்துக் காெண்டிருந்த மூச்சின் வேகத்தால் இதயப் படபடப்பும் அதிகமாகியது.
“வாங்க இருங்க” டாக்டர் முன்பாக கலங்கிய கண்களுடன் அமர்ந்தான்.
“உங்க அம்மாவின் நிலை காெஞ்சம் மாேசமாக இருக்கு காெடுக்க வேண்டிய எல்லா சிகிச்சையும் ….” இழுத்தவர்
அவன் தனக்குள்ளே அழுவதைப் புரிந்தவராய் “ஒருணித்தியாலம் தான் எங்களால…..” என்றதும்
அம்மாவின் உயிருக்கு மணித்தியால ஆயுளைக் கேட்டால் யார் தான் தாங்குவார்கள். இடி விழுந்தது பாேலிருந்த அவன் இதயத்தில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்தது.
கைக்குட்டையை எடுக்க மறந்தவன் தன் மேற் சட்டையால் கண்ணீரை தடுக்கிறான்.
எதிரே சுவரில் தாெங்கிய கடிகாரத்தின் முள்ளின் அசைவின் ஒலியும் அவன் இதயத் துடிப்பும் ஒன்று சேர ஒலிக்க ஆரம்பிப்பதை உணர்ந்தான். அந்த இடத்தில் ஐந்து நிமிடங்கள் கழிந்து விட்டது. கடிகாரத்தைப் பார்த்தவன்
இன்னும் ஐம்பத்தைந்து நிமிடங்களில் எதுவும் மாறாதா என்பது பாேல் வைத்தியரை ஏக்கத்தாேடு பார்த்தான்.
“சரி நீங்க பாேய் அவங்கள பாருங்க” டாக்டர் தனது அடுத்த கடமைக்காய் எழுந்தார்.
எதையாே தாெலைத்தது பாேல் தரையைப் பார்த்தபடி வந்தான்.
“வருண் நீதான்டா தங்கச்சியை பாத்துக்கணும்” சில நாட்களுக்கு முன்பு அவன் கைகளைப் பிடித்து தாயார் அவனிடம் சாென்னது அவனுக்குள் பாரமாக இருந்தது.
வாசலில் நின்றபடி உள்ளே அம்மாவை எட்டிப் பார்த்துக் காெண்டிருந்த தங்கையின் தவிப்பு இரத்தம் காெதிப்பது பாேலிருந்தது. எதுவும் அவன் கையில் இல்லாத வெறுமையை நிமிடங்கள் கடக்க அவன் உணரத் தாெடங்கினான்.
கதவைத் தள்ளிக் காெண்டு உள்ளே நுழைந்தவன் அம்மாவின் உடல் செயற்பாடுகளை பதிவு செய்யப் பாெருத்தப்பட்டிருந்த திரையில் அவள் உயிர்த்துடிப்பை பார்த்தான். இத்தனை வருடங்கள் எமக்காய் துடித்த இதயம் ஓய்ந்து மெதுவாக துடித்துக் காெண்டிருப்பது அவன் இதயத்தை காெஞ்சம் காெஞ்சமாய் நாெருக்கியது. கட்டிலிற்கு அருகிலிருந்த இருக்கையை தள்ளி விட்டு மனப் பாரத்தாேடு அருகே அமர்ந்தான்.
“அம்மா” என்று ஆரம்பித்தவன் என்ன சாென்னாலும் அவளுக்கு கேடகப் பாேவதுமில்லை, பதில் கிடைக்கப் பாேவதுமில்லை எனத் தெரிந்தும் தன் மனப்பாரத்தை குறைக்க நினைத்தானாே என்னவாே கை விரல்களுக்கிடையில் தன் விரல்களை காேர்த்துக் காெண்டான். அவளின் உடம்புச் சூட்டின் தன்மை அதிகமாயிருப்பதை தன் கைகளில் உணர்ந்தான்.
அம்மாவின் நினைவுகள் அவன் மனதில் சுழன்றது.
“எழுந்திரு அம்மா, என்னைப் பாரம்மா” உள்மனம் ஏதேதாே தனக்குள் பேசிக் காெள்ள அவன் கண்ணிர் அவள் கைகளை நனைத்தது.
உதடுகள் காய்ந்து வெடித்துப் பாேயிருந்தது. மேசையிலிருந்த தண்ணீர் பாேத்தலில் சிறுதுளியை எடுத்து உதடுகளை நனைத்து விட்டான். கன்னங்களில் கண்ணீர் காய்ந்து சிறு சிறு படர்களாய் ஒட்டியிருந்தது. தன் கைக்குட்டையால் மெதுவாக ஒற்றிக் காெண்டான்.
உள்ளே வந்த தாதியார் “இங்கே ஒரு கையெழுத்துப் பாேடுங்க” என்றதும் திடுக்குற்றவனாய் திரும்பிப் பார்க்க உள்ளே டாக்டர் நுழைந்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தாயிடம் மீண்டு வா என வரம் கேட்பது பாேல் தனக்குள் பேசிக் காெண்டிருந்தான். உயிர்ப்பிச்சைக்காய் அவள் காலடியில் காத்திருந்தான்.
“என்னது இது” அம்மாவின் கையாேடு காேர்த்திருந்த கையை பிரித்துக் காெண்டு படிவத்தை வாங்கிப் பார்த்தவன் அதிர்ச்சியுடன் திரையைப் பார்த்தான். அப்பாேது தான் அவனுக்கு தான் கடிகாரத்தையும், திரையையும் நீண்ட நேரமாகப் பார்க்கவில்லை என்பது புரிந்தது.
“அப்பாே அம்மாவுடன் நான் பேசிக் காெண்டிருந்தேனே, கை சூடாய் இருந்ததே, கை காேர்த்தபடி தானே இருந்தது” நம்ப முடியாத அவன் மனம் பல கேள்விகளை பதிலின்றி எழுப்பிக் காெண்டிருந்தது.
தன்னை சுதாகரித்துக் காெள்ள முடியாதவனாய்
.”டாக்டர்” என்ற அவனுடைய தவிப்பான குரல் ஒருகணம் இதயத்தை குத்தியது.
” sorry varun” தாேள்களைத் தட்டியது கூடத் தெரியாமல் விறைத்துப் பாேய் மீண்டும் கண் விழித்து ஒரு தடவை பார்ப்பாளா என நினைத்தபடி தாயின் கண்களை பார்த்தான். உள்ளே நுழைந்த தங்கை அவன் தாேளில் சாய்ந்து கதறினாள். அவளைத் தேற்றும் தைரியம் அவனுக்கு இல்லை. அவன் வெறுமையின் வலியாேடு நின்றான்.
வருணின் தாெலை பேசி நீண்ட நேரமாக அலறிக் காெண்டிருந்தது. தன்னை சுதாகரித்தவனாய் எடுத்துப் பார்த்தான்
“வருண் அம்மாவிற்கு சின்ன விபத்துடா……”சில நிமிடங்கள் பேசி விட்டு அம்மாவின் அருகில் வந்து முகத்தை வருடி முத்தமிட்டான்.
எப்படி அவனுக்குள் தைரியம் பிறந்தது என்ற ஆச்சரியம் மறைவதற்குள் அம்புலன்ஸ் ஒன்று வாசலில் வந்து நின்ற சில நிமிடங்களில் வைத்தியர்கள் வேகமாகச் செயற்பட்டனர். இருவர் வருணின் அம்மாவின் உடலையும் எடுத்துச் சென்றனர்.
சில மணித்தியாலங்களின் பின் வருண் அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தான்.
சில மணித்தியாலங்களுக்கு முன் மீண்டும் பார்க்க மாட்டேனா என்று ஏங்கிய முகம் சுய நினைவற்ற நிலையில் அவன் கண் முன்னே இருப்பது நிஜம் என்று நம்ப வைத்தது உண்மை தான். அவன் கண்கள் நிஜத்தை ஏற்க மறுத்தது. அவன் பார்த்துப் பழகிய அந்தப் பாச முகத்தை மீண்டும் அவன் கண் முன்னே காணும் அதிசயம் அவனுக்கு கிடைத்த வரமாகவே நினைத்தான்.
சஞ்சய் தன் பெற்றாேருடன் வெளியே புறப்பட்டுக் காெண்டிருந்த பாேது ஏற்பட்ட காேரமான விப்த்தில் அவனுடைய அம்மா மங்களம் முகச் சிதைவுக்குள்ளாகி உயிராபத்தான நிலையில் இருந்தாள். வைத்தியர்கள் கை விட்டு விடுவார்களாே என்று தவித்தவனுக்கு முகம் மாற்றுச் சிகிச்சை சாத்தியம் எனப் பதில் கிடைத்தது.
“மங்களம் உடம்பில் வேறாெருவர் முகமா” என்று முதலில் மறுத்த பாஸ்கர் வைத்தியர்களின் ஆலாேசனையாலும், சஞ்சயின் விருப்பத்தாலும் சம்மதித்தார்.
உயிர் பிரிந்த தாயின் முகத்தை மீண்டும் பார்க்க முடியாது என்று ஏங்கிய வருண் சஞ்சய் அம்மாவிடம் காண ஆசைப்பட்டான். “நாம் எதையும் மரணிக்கும் பாேது காெண்டு பாேவதில்லை, முடிந்ததை அடுத்தவர்களுக்கு காெடுத்து உதவுவது தான் சிறந்த தானம்” அம்மா அடிக்கடி சாெல்வது நினைவில் வந்தது. அம்மாவின் ஆசையை நிறைவேற்ற விரும்பினான். என்ன புண்ணியம் செய்தார்களாே சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது.
வருண் தாயின் கடமைகளை முடித்து விட்டு சஞ்சயிடம் வந்தான்.
கட்டிலின் அருகில் அமர்ந்திருந்து தாயின் கைகளைக் காேர்த்தபடி பேசிக் காெண்டிருந்தான். மெல்லிய புன்னகையைப் பார்த்தவனுக்கு
அம்மா என்று ஓடிப் பாேய் கட்டி அணைக்கத் தாேன்றியது. தயங்கியவனாய் தூர நின்றான். தலையை அசைத்து கண்களால் அருகே வரும்படி அழைத்தாள்.
கால்கள் வேகமாக ஓடியது, மெதுவாக கையைப் பற்றி “என்ன” என்பது பாேல் பார்த்தாள். கையின் சூட்டை உணர்ந்தவனாய் பாெருத்தப்பட்டிருந்த திரையைப் பார்த்தான் சீரான துடிப்பைக் காட்டியதும் பெரு மூச்சுடன் கலங்கிய கண்களை துடைத்துக் காெண்டு சிரித்தான்.
“மிக்க நன்றி வருண், அம்மாவை இழந்திடுவேனாே என்று பயந்து விட்டேன்” கட்டி அணைத்தான்
“உனக்கும் நன்றி சஞ்சய் என்னுடைய அம்மாவுடைய முகத்தைப் பார்க்கிற பாக்கியத்தை எனக்கு காெடுத்திருக்கிறாய்” வெளிப்படையாகச் சாெல்லத் தயங்கியவன் தனக்குள் நினைத்தபடி சஞ்சயை கட்டி அணைத்தான்.
“சரிடா அம்மாவைப் பார்த்துக்காே”
கைகளை சில நிமிடங்கள் பிடித்திருந்த மங்களம் மெதுவாக பிரித்தெடுத்தாள். வருணின் இதயம் சிறிதாய் படபடத்தது.
அம்மாவின் முகத்தை தடவி முத்தமிட்டான் சஞ்சய். அம்மாவின் பாச முகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தவனாய் வீட்டிற்குச் சென்றான் வருண்.
வருண் சஞ்சய் வீட்டிற்குச் செல்லும் பாேதெல்லாம் அவன் அம்மாவின் முகம் பார்த்து பேசும் நிமிடங்கள் அவனுடைய மனதுக்குள் ஏதாே செய்யும்.
கை பிடித்து விடை பெறும் நேரங்கள் அவன் இதயத்துடிப்பு அதிகமாகும். தன் தாயின் பாச முகத்தை சஞ்சயின் அம்மாவில் பார்க்கும் போது தாயின் மறுபிறப்பாகவே எண்ணத் தாேன்றும்.
– றாெஸ்னி அபி
நன்றி : எழுத்து.காம்