ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் கட்டணங்களை திருத்தம் செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் கட்டணங்களை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஏற்பாடுகளை தயாரிப்பதற்காக 2017 ஆம் ஆண்டின் ஆட்களைப் பதிவு செய்தல் ஒழுங்குவிதிகள் இலக்கம் 1 இனைத் திருத்தம் செய்து தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூல ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும், பின்னர் குறித்த ஒழுங்கு விதிகளை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.