லண்டன் அபியகம் நிதியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் சாதாரண தர மாணவர்களுக்கான விசேட வகுப்பின் போது தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் திருமதி சூரியகுமாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விசேட வருகையாளராக கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சிவனருள்ராஜா கலந்து கொண்டார்.
குறைந்த புள்ளிகளை பெறும் இடர்படும் மாணவர்களுக்கான வகுப்புக்கள் தினமும் காலை 6.30 மணிக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் இடம்பெற்று வருகின்றன.
இம் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்கில் குறித்த மாணவர்களுக்கு காலையில் தேநீர் மற்றும் சிற்றுண்டியை வழங்க அபியயம் நிதியம் உதவ முன் வந்திருந்தது.
இதன் போது மாணவர்கள் எதிர்வரும் சாதாரண தர வகுப்பில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கான உத்திகளையும் வழிமுறைகளையும் எடுத்துக் கூறிய வலயக் கல்விப் பணிப்பாளர் எல்லா மாணவர்களும் நல்ல பெறுபேறுகளை எடுக்க வேண்டும் என்றும் ஊக்குவித்தார்.