0
யாழ்ப்பாணம், நிலாவரைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளார்.
குறித்த வயோதிபர் வீதியில் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த சுப்பையா இரத்தினசிங்கம் (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.