0
யாழ்., குருநகர் பகுதியில் உரிமம் இன்றி கடலட்டை பிடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து ஒரு தொகை கடலட்டைகளும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி நபர்கள் கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காகக் குருநகர் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.