இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
“வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும்” – என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.