ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி அரசுடன் இணைந்து சுயாதீனமாகச் செயற்படும் அமைச்சர்கள் குழு, மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பில் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினரே இது தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று வருகின்றனர்.
இந்தப் பேச்சின் அடிப்படையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இது குறித்து சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவிடம் ஊடகங்கள் கேட்டபோது, இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன எனவும், அது நடக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.