0
திருகோணமலை, கந்தளாய் – அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த 17 பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரயில் தடம்புரண்டதில் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் 2 பேரும், பயணிகள் 15 பேரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.