பிரிட்டன் தம்பதியின் பொருட்களையும் பணத்தையும் திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் தம்பதியிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள், வங்கி அட்டைகள் மற்றும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட பொருட்கள் சில பற்றைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பிரிட்டன் தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் திருடி, பாதுகாப்புப் பெட்டகத்தை கடலில் வீசியுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் களுத்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.