ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நானுஓயாவில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நானுஓயா, கிலோசோ தோட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிறிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மோதியே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
நானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் மீட்கப்பட்டு தற்போது நானுஓயா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ள குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.