சூடானில் இராணுவ மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சூடானில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தது என்றும், அவர்களில் 13 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
எஞ்சியவர்கள் இந்தியா அல்லது சவூதி அரேபியாவின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.